41 வெட்டுகளுடன் வெளிவரும் படம்

செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (17:12 IST)
சென்சார் ஒரு படத்தில் 41 காட்சிகளை எடிட் செய்ய கூறியிருக்கிறது. அந்தப் படம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடிகிறதா?
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி மெக்பூல், ஓம்காரா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் இசையமைப்பாளரான விஷால் பரத்வாஜ். இரண்டுமே அற்புதமான திரைப்படங்கள். தற்போது ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டை தழுவி ஹெய்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஷாகித் கபூர், ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள இந்தப் படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட்ட போது ஏழு இடங்களில் படத்துக்கு கத்திரி போட வேண்டும் என்றிருக்கிறார்கள்.
 
அதனால் இரண்டாம்முறை மீண்டும் படம் திரையிடப்பட்டது. அப்போது ஏழு நாற்பத்தியொன்றாக அதிகரித்தது. ஆனால் அதற்கெல்லாம் விஷால் பரத்வாஜ் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சொன்னபடி செய்ததால் படம் இன்னும் ஷார்ப்பாக மாறிவிட்டது என்று அதை பாஸிடிவாக எடுத்துள்ளார்.
 
படத்துக்கு சென்சார் யுஏ சான்றிதழ் தந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்