2013 ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் - டாப் 10 படங்கள்

வெள்ளி, 3 ஜனவரி 2014 (20:39 IST)
சென்ற ஆண்டு ஹிந்தி சினிமாவுக்கு அபாரமான வருடம். எட்டு படங்கள் நhறு கோடியை தாண்டி வசூலித்தன. அதில் மூன்று இருநூறு கோடியை கடந்தன. மேலும், இதுவரையான ஹிந்தி சினிமா ச‌ரித்திரத்தின் வசூல் சாதனையும் மாற்றி எழுதப்பட்டது.
FILE

2009 ல் வெளியான அமீர்கானின் 3 இடியட்ஸ் படமே இதுவரை இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த ஹிந்திப் படமாக இருந்தது. மொத்தம் 202.47 கோடிகள்.

சென்ற வருடம்...

ஆகஸ்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் அந்த சாதனையை ஊதித் தள்ளியது. ஷாருக்கான் படத்தின் இந்திய வசூல் 227.13 கோடிகள். இரண்டே மாதத்தில் க்‌ரிஷ் 3 244.92 கோடிகள் வசூலித்து ஷாருக்கான் படத்தின் சாதனையை தாண்டியது.
FILE

இவ்வளவு பெ‌ரிய டார்கெட்டை உடனடியாக உடைத்ததே ஒரு சாதனைதான். ஆனால் அதிகம் தாமதிக்காமல் டிசம்பர் 20 வெளியான தூம் 3 க்‌ரிஷ் 3 யின் சாதனையை உடைத்து 252.7 கோடிகளை வசூலித்துள்ளது.

ரன்பீர் கபூ‌ரின் ஹே ஜவானி ஹை தீவானி 188.57 கோடிகளை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ராம் லீலா 116.33 கோடிகள், பாக் மில்கா பாக் 108.93 கோடிகள், கிராண்ட் மஸ்தி 102 கோடிகள்.

எட்டாவது இடத்தைப் பிடித்த...

ரேஸ் 2 100.45 கோடிகள், ஒன்பதாவது ஆஷிக்யூ 2 78.42 கோடிகள், ஸ்பெஷல் 26 66.8 கோடிகள். அப்படியானால் நூறு கோடி வசூலித்ததாக பார்ட்டி வைத்து கொண்டாடிய ராஞ்சனா...?
FILE

வடஇந்திய ஊடகங்களின் கணக்குப்படி ராஞ்சனா அறுபது கோடி அளவுக்கே வசூலித்திருக்கிறது. நிச்சயமாக நூறு கோடி எல்லாம் கிடையாதாம். அப்படியானால் உண்மை தெரியாமல்தான் தமிழன் முதல் படத்திலேயே நூறு கோடி வசூலித்துவிட்டான் என்று துள்ளினோமா?

வெப்துனியாவைப் படிக்கவும்