மிஷ்கினின் முகமூடி படத்தின் பலவீனமாக முன் வைக்கப்பட்டதில் முக்கியமானது ஹீரோயின். முகமூடியில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பூஜா ஹெக்டே. அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. சில விமர்சகர்கள் இதனை வெளிப்படையாக எழுதவும் செய்தனர்.
தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட பூஜா ஹெக்டே இந்தியில் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள்ளார். லகான், ஸ்வதேஸ், ஜோதா அக்பர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஷுதோஸ் கவாரிகரின் மொகஞ்ச தாரோ படத்தில் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்க உள்ளார்.