வெளிநாடுகளில் க்ரிஷ் 3 ஓபனிங்கை முறியடித்த ராம் லீலா

வியாழன், 21 நவம்பர் 2013 (11:29 IST)
வெளிநாடுகளின் ஒட்டு மொத்த ஓபனிங் வசூலில் க்ரிஷ் 3 யை ராம் லீலா முந்தியிருக்கிறது.
FILE

யுஎஸ், யுகே, பிஜு, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா என்று வழக்கமாக ஹிந்திப் படங்கள் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் ராம் லீலா வெளியானது.

யுஎஸ்ஏ யில் முதல் மூன்று தினங்களில் 9.04 கோடிகளை வசூலித்துள்ளது. இது க்ரிஷ் 3 யின் யுஎஸ் ஓபனிங்கைவிட அதிகம்.
FILE

யுகேயில் 3.53 கோடிகளையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 5.95 கோடிகளையும், ஆஸ்திரேலியாவில் 1.53 கோடியையும், நியூசிலாந்தில் 27.75 லட்சங்களையும் வசூலித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக வார இறுதியில் 25.04 கோடிகளை வசூலித்து க்ரிஷ் 3 யின் வெளிநாட்டு ஓபனிங் வசூலை முறியடித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்