ராணி முகர்ஜியின் நடிப்பில் வெளிவந்த மர்தானி படம் நன்றாக இருந்தாலும் அதிலுள்ள வன்முறை, கொச்சை வசனங்கள் காரணமாக குழந்தைகள் படத்தை பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அமீர்கான் கூறியது பெரும் சர்ச்சையானது.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸில் தள்ளாடிக் கொண்டிருக்க, அமீரின் விமர்சனம் காரணமாக வசூல் மேலும் கீழிறங்கும் நிலை. மர்தானி செகண்ட் பார்ட் குறித்த கனவிலிருந்த ராணி முகர்ஜியை அமீர் கானின் கமெண்ட் வால் திருகி விட்டது.