மீண்டும் இணையும் புலிக்கூட்டணி

வெள்ளி, 11 ஜூலை 2014 (18:15 IST)
ரமலான் திருநாள் சல்மானின் அதிர்ஷ்டத் திருவிழா. ரமலானை முன்னிட்டு வெளியான அவரது படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. சாதாரண வெற்றியல்ல சூப்பர் டூப்பர் ஹிட்.
 
இந்த ரமலானுக்கு கிக் வெளியாகிறது. பிரபல தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா இயக்குனராக அறிமுகமாகும் கிக் இதே பெயரில் ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான படத்தில் தழுவல் (தமிழில் தில்லாலங்கடி). 
இதையடுத்து கபீர் கான் இயக்கத்தில் பஜ்ரங்கி பாய்ஜான் என்ற படத்தில் சல்மான் நடிக்கிறார். வரும் நவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
 
இவர்கள் இணைந்த கடைசிப் படம், ஏக் தா டைகர். சல்மான் கானின் திரை வாழ்க்கையில் இந்தப் படம்தான் அதிகம் வசூல் செய்தது. இந்தியாவில் மட்டும் 198.78 கோடிகள். 
 
இந்தப் படத்தில் சல்மானின் ஜோ‌டியாக நடிக்கயிருப்பவர் கரீனா கபூர். ஏக் த டைகருக்கு முன்னால் காபுல் எக்ஸ்பிரஸ், நியூயார்க் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் கபீர் கான். இவர்கள் இணைகிறார்கள் என்றபோதே ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் குஷியாகிவிட்டனர். படத்தை சல்மான் கான் தனது சல்மான் கான் வென்ஜர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
 
ஆக, அடுத்தப் பாய்ச்சலுக்கு சல்மான் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்