கரடு முரடான மேரி கோம் கதாபாத்திரத்தில் பாலீஷ் செய்யப்பட்ட மெழுகுச்சிலையாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா எப்படி செட்டாவார் என்று அனைவருக்கும் சந்தேகம். அதனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீஸரும் அடித்து நொறுக்கியுள்ளது. தீவிரமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் எல்லாம் வைத்துள்ளார் ப்ரியங்கா. அத்துடன் தோற்றத்திலும் அப்படியொரு மாற்றம். டீஸரை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றனர். அதற்கு மேரி கோம் பன்ச் என்று வைத்தது சாலப் பொருத்தமான பெயர்.