பெண்களின் நடுவில் ஆண்களின் படம்

வியாழன், 13 மார்ச் 2014 (18:02 IST)
அனுராக் காஷ்யபின் படங்களில் ரொமான்டிஸம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் தனிப்பட்ட முறையிலும் தொழில்முறையிலும் மனிதரிடம் ரொமான்டிஸம் வழிகிறது. தனது புதிய படத்துக்கு உதவி இயக்குனர்களாகவும், தயாரிப்பு தரப்பிலும் நியமித்திருப்பது அத்தனையும் பெண்கள்.
FILE

அக்ளி படத்தை இயக்கியவர் தற்போது கவனம் செலுத்துவது பாம்பே வெல்வெட் படத்தில். இதில் முதல்முறையாக இந்தியின் முன்னணி ஹீரோ ரன்பீர் கபூரை நடிக்க வைத்துள்ளார். இந்தப் படத்தில் ரன்பீருக்கு பாக்சர் வேடம். உடம்பை கச்சிதமாக மெயின்டெயன் செய்வதற்காக படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் எல்லாம் தனது பிரத்யேக சமையல்காரரையும் உடன் அழைத்து செல்கிறார் ரன்பீர். அவர் சமைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.

அனுராக் காஷ்யபின் உதவி இயக்குனர்கள் மட்டுமின்றி தயாரிப்பிலும் பெண்களை நியமித்திருப்பதால் ஆல் இஸ் வெல் என்று கூறியுள்ளார் ரன்பீர். பெண்கள் தங்களுக்கு தரப்படும் வேலையை கச்சிதமாக முடிப்பார்கள். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. இந்த டீமில் வேலை செய்வதே சுகமாக உள்ளது என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்.

ரன்பீர் கபூருடன் அனுஷ்கா சர்மா, கே கே மேனன், கரண் ஜோஹர், ரவீணா டண்டன், சித்தார்த் பாசு, ரிமோ பெர்னான்ட்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இசை அமித் திரிவேதி. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து அனுராக்கே படத்தை தயாரிக்கிறார்.

கரண் ஜோஹர், விக்ரமாதித்யா மோத்வானி ஆகியோருடன் இணைந்து அனுராக் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

அனுராக்கின் முந்தையப் படம் அக்ளி 2013 கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் இந்த வருடம்தான் இந்தியாவில் வெளியாகிறது. பாம்பே வெல்வெட் படத்தை 2014 டிசம்பர் 25 வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்