பாகிஸ்தானில் இந்திப் படத்தின் ப்ரீமியர் ஷோ

ஞாயிறு, 9 மார்ச் 2014 (16:05 IST)
இந்தியாவில் தயாராகும் படங்கள் பாகிஸ்தானில் அமோக வரவேற்புடன் ஓடுகின்றன. பாகிஸ்தான் படங்களைவிட இந்திப் படங்களுக்குதான் அதிக கூட்டம். அதனால் இந்திப் படங்களை தடை செய்யும் முயற்சியும், அவற்றின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது முன்னெடுக்கப்படும்.
FILE

இந்நிலையில் இந்தியில் தயாரான படத்தின் ப்ரீமியர் ஷோவை பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். படம், Total Siyapaa.
FILE

லண்டனில் வசிக்கும் இளைஞன் ஒருவன் இந்திய பெண் மீது காதல் வசப்படுகிறான். அவளை மணம் செய்துகொள்ள அந்த பெண்ணின் குடும்பத்தின் சம்மதத்தைப் பெற இந்தியா வருகிறான். அவனது முயற்சிகள் அவர்களிடம் பலிக்கவில்லை. காரணம் அவன் ஒரு பாகிஸ்தானி.

இதுபோன்ற காதல் கதைகள் இந்திய சினிமாவில் ஏற்கனவே உள்ளதுதான். ஆனால் அதில் காதலன் ஆணாகவும், காதலி பாகிஸ்தானைச் சேர்ந்தவளாகவும் இருப்பர். முதல்முறையாக அப்படியே உல்டா. ஆண் பாகிஸ்தானி, பெண் இந்தியர். பாகிஸ்தானில் தைரியமாக ப்ரீமியர் ஷோ நடத்துவதற்கு இந்த மாற்றம்தான் காரணம்.

இந்த ப்ரீமியர் ஷோ வில் படத்தின் திரைக்கதையாசிரியரும், இணை தயாரிப்பாளருமான நீரஜ் பாண்டேயும், படத்தின் ஹீரோ - பாகிஸ்தானின் பிரபல நடிகர் அலி ஜாஃபரும் கலந்து கொண்டனர்.

நீரஜ் பாண்டே ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்