கற்பழிப்பு காட்சிகள் - ராணி முகர்ஜி படத்தை கண்டித்த சென்சார்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (17:48 IST)
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்ய சோப்ரா தயாரித்திருக்கும் படம் மர்தானி. ராணி முகர்ஜிதான் படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாம். 
 
பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதுதான் படத்தின் கதை. இந்த கடத்தல் கும்பலை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார். 
படத்தில் வரும் கற்பழிப்பு குறித்த கமெண்ட்டுக்கு சென்சார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதே போல் சிறுமியின் தொடைகளில் இரத்தம் வழிவதாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்றும் கண்டிப்பு காட்டியது. இப்படி பல காட்சிகளுக்கு சென்சார் ஆட்சேபம் தெரிவித்தது.
 
மனித மனதின் குரூரத்தை வெளிக்காட்ட இந்தக் காட்சிகள் அவசியம் என்று அவர்களிடம் வாதிட்டிருக்கிறார் ஆதித்ய சோப்ரா. ஆனாலும் சிறுமியின் தொடைகளில் ரத்தம் வழியும் காட்சியை நீக்கியுள்ளனர். கற்பழிப்பு குறித்த வசனம் படத்தில் இடம்பெறுகிறது. அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கத்தகுந்த ஏ சான்றிதழை சென்சார் படத்துக்கு தந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்