Shhuddhi படத்தில் முதலில் ஒப்பந்தமானவர்கள் ஹிர்த்திக் ரோஷனும், கரீனா கபூரும். இந்நிலையில் திடீரென படத்திலிருந்து விலகினார் ஹிர்த்திக். அவருடைய இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்று பாலிவுட் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. சல்மான் கான் ஒப்பந்தமானது அனைவருக்கும் வியப்பு.
கடந்த சில வாரங்களாக கரண் ஜோஹரும், சல்மானும் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகின்றனர். கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சல்மான் கலந்து கொண்டார். பார்ட்டிகளிலும் இருவரும் ஒன்றாக அதிக நேரத்தை செலவிட்டனர். இதெல்லாம் பாலிவுட்டின் புருவங்களை உயரச் செய்தது.
சல்மான் கானின் கிக் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து நோ என்ட்ரி படத்தின் சீக்வெல், ஆதித்ய சோப்ராவின் படம், மகேஷ் மஞ்சுரேக்கர் இயக்கத்தில் ஒன்று என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் கரண் ஜோஹர் தயாரிக்கும் Shhuddhi 2016 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். சல்மான் கானுடன் நடிக்கப் போகும் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.