வாஸ்து ஹோமத்தால் கிடைக்கும் பலன்கள்...!

செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (14:36 IST)
வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. 
அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.
 
வழிபட வேண்டிய தெய்வம்: வாஸ்து பகவானுக்கு வரலட்சுமி, இரண்டு கலசங்களில் இருவரையும் சிவப்பு நிற பட்டு, பச்சை நிறத் துணியாலும் செவ்வரளி, ரோஜா மலராலும் அலங்கரித்து செவ்வக யாக குண்டம் அமைத்து படமும் வைத்து ஆவாகனம் செய்தல் வேண்டும்.
 
பொருத்தமான நாள்: வாஸ்து பகவான் விழிக்கும் தினம் செவ்வாய், வியாழக்கிழமைகள் சுபவேளை.
 
ஹோமம் பொருட்கள்: அரச இலை, வெள்ளொருக்கன், மாச மித்துக்குச்சிகள், பசு, நெய், 16 வகையான பொருட்கள் ,தேன், வெண் கடுகு, சிந்தில், பால், தயிர், 5 வகைப் பழங்கள், நவதான்யம் , 9 வண்ணத் துணிகள்.
 
பலன்கள்: சொந்தமனை வங்கலாம், மனையில் வீடு கட்டும் தடைகள் நீங்கும், செளபாக்யமான இல்லம் செல்வச் செழிப்புடன் அமைந்திடும்.
 
ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே யோக மூர்த்யாய தீமஹி 
தந்தோ சிவப்ரசோத யாத், ஓம் ஸ்ரீம் க்லீம் வாஸ்து தேவியாய ஸ்வாஹா
ஓம் தனுர்தராய வித்மஹே சர்வ சித்திச்ச தீமஹி தந்தோ தரா: ப்ரசோதயத் 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்க்குஹவரப்ரியாய பூமிலாப கர்னய 
வாஸ்துக்குமி ஸ்ரீம் ஐம் ஸ்வாஹா முடிவில் பூசுக்தம் கூறி வழிபடவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்