பாம்பாக உருமாறும் பெண்!

பெண்ணாக உருமாறும் பாம்பையும், பாம்பாக உருமாறும் பெண்ணையும் நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போகும் ஒரு பெண் தான் ஒவ்வொரு நாளும் பாம்பாக மாறுவதாகக் கூறுகிறார்.

அதாவது நாகலோகத்தில் இருந்து தனது அன்புக் காதலனைக் காண்பதற்காக அவர் இந்த பூமியில் வந்து பிறந்துள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பாத்நகர் என்ற இடத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் மாயா என்ற அந்தப் பெண் வாழ்ந்து வருகிறார்.

இவர் நாகலோகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவ்வப்போது பாம்பு உருவெடுத்து நாகலோகம் சென்று தனது 3 சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவதாகவும் கூறுகிறார்.

சிறு வயதில் இருந்தே தனக்கு திருமணமாகிவிட்டது என்ற எண்ணம் மனதில் இருந்து வருவதாகவும், விரைவில் எனது கணவன் திரும்பி வந்து தன்னுடன் சேருவார் என்றும் இவள் நம்புகிறாள்.

இந்த பூமியில் பிறந்து தனது குடும்பத்தாரின் மீதான அன்பினால் தனது கணவர் அவரது சக்திகளை இழந்து விட்டதாகவும் மாயா கூறுகிறார்.

webdunia photoWD
மாயாவின் பிறப்பைப் பற்றி அவளே கூறுகையில், தான் துவாபார யுகத்தில் பிறந்திருந்தபோது, ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டேன். அப்போது பீர் பாபா என்றத் துறவி தன்னைக் காப்பாற்றுவதற்காக கோபால் என்ற பாம்பினை அனுப்பி வைத்தார். பின்னர்தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனால் நான் தற்கொலை செய்து கொண்டேன். அன்றைய தினத்தில் இருந்து நான் என் காதலனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

நாகலோகம், ம்ரித்யுலோகம் (இப்பூமி) என்பது பற்றி அசாதாரண விஷயங்களை எல்லாம் இந்த மாயா கூறுகிறார். இதைப் பற்றி அறிந்த நாள் முதல் அந்த ஊர் மக்கள் மாயாவை மா பகவதி என்று வணங்க ஆரம்பித்துவிட்டனர்.

இதெல்லாம் மக்கள் தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மாயா கூறும் கட்டுக்கதைகளா அல்லது பாம்பாக உருவெடுக்கும் தனது உண்மையான சக்தியாலா? என்பது தெரியவில்லை.

இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எப்படி நம்ப முடிகிறது? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், எங்களுக்கு எழுதுங்கள்.