பெண்கள் வேலைக்குப் போவதால்தான், வேலையில்லாத் திண்டாட்டம் - பள்ளிப் புத்தகத்தில் தகவல்

புதன், 23 செப்டம்பர் 2015 (20:55 IST)
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதற்குக் காரணம், வேலைக்குப் போகும் பெண்கள்தான் என்று கூறும், பள்ளிக்கூடப் புத்தகம் ஒன்றை எதிர்த்து, மத்திய இந்திய மாநிலமான, சத்தீஸ்கர் பள்ளி ஆசிரியர் ஒருவர் புகார் தந்திருக்கிறார்.
 

 
சௌம்யா கார்க் என்ற ஆசிரியை, மாநில அரசுக்கு அனுப்பிய புகார் ஒன்றில், மேல் நிலைப் பள்ளி புத்தகங்கள் பெண்களுக்கு ஆண்களைப் போலவே வேலைவாய்ப்பில் சம உரிமை இருக்கிறது என்று சொல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
 
இந்த சமூக அறிவியல் புத்தகத்தில், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்ததால்தான், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்ட சதவீதம் அதிகரித்துவிட்டது என்று கூறுகிறது.
 
சத்தீஸ்கார் மாநில அரசு இந்த புகார் குறித்து இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்