விமானம் சுடப்பட்டது சர்வதேச குற்றம்: உக்ரைன் பிரதமர்

வெள்ளி, 18 ஜூலை 2014 (17:34 IST)
மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல், ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் உக்ரைன் பிரதமர் கூறியுள்ளார்.

ரஷ்யா அளவுக்கு அதிகமாகச் சென்றுவிட்டது என்று பிரதமர் அர்செனியு யத்சென்யுக் கூறினார்.

ஆம்ஸ்டெர்டாமில் இலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் பறந்த இந்த விமானம் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவுடனான எல்லைக்கு அருகில், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள ஒரு பகுதியில், கீழே விழுந்து எரிந்துபோனது.

கிளர்ச்சிப் படைகள்தான் இத்தாக்குதலை நடத்தினார்கள் என்று உக்ரைன் அதிகாரிகள் குற்றஞ் சாட்டுகின்றனர், ஆனால் தமக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவிகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுவிட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்