சீனாவில் தீக்குளித்த திபெத்திய பெண்

வியாழன், 28 மே 2015 (20:39 IST)
வடமேற்கு சீனாவில் வாழும் இரு குழந்தைகளின் தாயான திபெத்திய பெண் ஒருவர் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டமாக தீக்குளித்துள்ளார்.
 

 
திபெத்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் கன்சு மாகாணத்தில், மடாலயம் ஒன்றுக்கு அருகாக உள்ள போலீஸ் நிலையம் ஒன்றுக்கு வெளியே, இவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக உரிமைக்குழு ஒன்று கூறுகின்றது.
 
பின்னர் அவரது உடலை அகற்றிய போலீஸார், அவரது உறவினர்களின் வீடுகளில் தேடுதல் நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.
 
அப்படியான சம்பவம் நடந்ததை போலீஸார் மறுத்துள்ளனர்.
 
மதத்துக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரான அடக்குமுறை என்று தாம் கூறுவதற்கு எதிரான போராட்டமாக அண்மைய வருடங்களில் சுமார் 150 திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளனர்.
 
கடந்த வாரம் திபெத்தியர்கள் அதிகமாக வாழும் இன்னுமொரு தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் நான்கு குழந்தைகளின் தந்தை ஒருவர் தீக்குளித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்