38 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ''மைக்ரோபிரக்கியஸ் டிக்கி'' (Microbrachius dicki) என்னும் வகையிலான மீன்களே, முட்டை போடுவதற்குப் பதிலாக முதன் முதலில் பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்ததாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறியுள்ளது.
ஆனால், அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் ஆண்டுகளின் பின்னர் சுறா போன்றவற்றின் மூலம், மீண்டும் உடலுறவு மூலம் இனப்பெருக்க செய்யும் தன்மை வந்துவிட்டதாம்.