“பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” – பிரதமர் மோதி

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (10:39 IST)
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோதி.

இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோதி முன்னதாக பட்டேல் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோதி, "உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்