உடலுறுப்பு தானத்தில் தமிழகத்துக்கு முதலிடம்: மத்திய அரசு விருது

வெள்ளி, 27 நவம்பர் 2015 (19:40 IST)
உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.


 
 
புது டில்லியில் வெள்ளியன்று ஆறாவது "இந்திய உடல் உறுப்பு தான நாள்" அனுசரிக்கப்பட்டது.
 
மாண்புமிகு மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு.ஜே.பி.நட்டா அவர்களது தலைமையில் புது டில்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,உடலுறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் முதன்மை மாநிலதிற்கான விருதினை மாண்புமிகு மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கினார்.
 
இவ்விருதினை தமிழ்நாடு அரசின் சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு (ம ) குடும்பநலத்துறை செயலாளர் திரு.ஜே.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்களும் உடனிருந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் நிகழ்த்திய உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்