"சிங்கப்பூரின் தந்தை" லீ குவான் யூவை விமர்சித்தவருக்கு சிறை

திங்கள், 6 ஜூலை 2015 (19:03 IST)
சிங்ப்பூரில், மத உணர்வுகளை காயப்படுத்தியதுடன், ஆபாசமான காட்சிகளை விநியோகித்தார் என்ற குற்றங்களுக்காக பதின்ம வயது வாலிபர் ஒருவருக்கு நான்கு வாரங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

 
16 வயதான அமொஸ் யீ, சிங்கப்பூரை நிறுவியரும், சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ குவான் யூ அவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தார்.
 
அத்துடன், லீ அவர்கள் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் பாலியல் உறவு கொள்வதைப் போன்று மாற்றயமைக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் இணையதளத்தில் பிரசுரித்திருந்தார்.
 
லீ குவான் யூ மரணமடைந்த பிறகு அவருக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அந்தப் படங்களை அவர் பிரசுரித்திருந்தார்.
 
இவர் ஏற்கனவே தண்டனைக் காலத்தை சிறையில் கழித்திருந்ததால், அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்