ரஷ்யா- உக்ரைன் போர்: மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (00:02 IST)
மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதல் குறித்து மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியிருக்கிறார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்க வருமாறு அவர் தமது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய ஆணையத் தலைவர் வூர்சுலா ஃபொண்டெர்லயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ட்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், போலாந்து அதிபர் ஆண்டர்ஜெஸ் டூடா, ருமேனியா அதிபர் கிளாஸ் ஐஹானிஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இந்த அழைப்பை அமெரிக்க அதிபர் பைடன் விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்