"மூத்த மரங்களைக் காட்டிலும் காற்றை அதிகம் சுத்தம் செய்வது இளைய மரங்கள்தான்"

வியாழன், 4 பிப்ரவரி 2016 (19:08 IST)
மூத்த மரங்களைக் காட்டிலும் அதிகமான கரியமிலவாயுவை இளம் மரங்கள் காற்றுவெளியில் இருந்து அகற்றுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.
 

 
பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் லத்தீன அமெரிக்க வெப்பமண்டலக் காடுகளில் ஆய்வு செய்த நெதர்லாந்து விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
காலாகாலமாக மனிதனின் கைபடாமல் இருந்துவரும் காடுகளை விட பதினோரு மடங்கு அதிகமான கரியமிலவாயுவை இக்காடுகள் உள்வாங்கிக்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
மனிதப் பயன்பாட்டுக்காக மரங்கள் வெட்டப்பட்ட காடுகளை மீண்டும் மரங்கள் வளரச் செய்வது என்பது புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு இதுவரை நினைத்துவந்ததை விட மிகவும் அவசியம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
 
ஆய்வின் முடிவுகள் தி நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்