டிஜிடல் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே வெளியிடும் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:19 IST)
2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான 10 அறிவிப்புகள்.

1. பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியே டிஜிடல் ரூபாய்களை வெளியிடும்.

2. வரும் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் குறைந்த விலை வீடுகள் 44 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும்.

3. 2022-23ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுகுறு தொழில்களும், அரசாங்கமும் இதில் இணைந்துகொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

4. 75 மாவட்டங்களில் 75 டிஜிடல் வங்கிகள் உருவாக்கப்படும்.

5. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி செல்பேசி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, அலைக்கற்றை ஏலம் 2022இல் நடத்தப்படும்.

6. அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். 2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.

7. ஒன்றரை லட்சம் அஞ்சல் நிலையங்களும் கோர் பேங்கிங் முறையில் இணைக்கப்படும்.

8. வரும் நிதியாண்டி இ பாஸ்போர்ட் முறை அறிமுகம் செய்யப்படும்.

9. கென்-பெட்வா இணைப்பு முறையில் 44,605 கோடி ரூபாய் செலவில் 9 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

10. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும். இது மாநில அரசுகளைப் பங்காளியாக ஆக்கும். இது தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கும் மற்றும் ஏற்றுமதியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்