இஸ்ரேலை அங்கீகரிக்கும் வத்திகான் ஒப்பந்தம் கையெழுத்தானது

சனி, 27 ஜூன் 2015 (10:34 IST)
பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் தனது நடவடிக்கையை உறுதி செய்யும் நடவடிக்கையாக பாலஸ்தீன அரசுடன் முறையான ஒப்பந்தம் ஒன்றில் வத்திகான் கையொப்பமிட்டுள்ளது.

தனது இந்த நடவடிக்கை இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான சமாதானத்தை ஊக்குவிக்கும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் கத்தோலிக்க தேவாலய செயற்பாடுகளை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும்.

இந்த நடவடிக்கை அவசரமான ஒன்று என்று வர்ணித்திருக்கும் இஸ்ரேலிய அரசு, வத்திக்கானுடனான தனது உறவை இது பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன அரசை 2013 ஆம் ஆண்டு வத்திகான் முதன்முதலாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. அந்த அங்கீகாரத்தை கடந்தமாதம் முறையான ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்