காவல் துறையில் சேர, கன்னித்தன்மை சோதனை: இந்தோனேசியாவில் கண்டனம்

புதன், 19 நவம்பர் 2014 (13:18 IST)
இந்தோனேசிய காவல் துறை தமது படையில் சேர வந்த பெண்களுக்கு கன்னித் தன்மை பரிசோதனையை நடத்தியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


 
இது குறித்து இந்தோனேசியாவின் 6 நகரங்களில் மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் விசாரணை நடத்தியது.
 
இந்த சோதனையானது, பெண்களை கேவலப்படுத்துவதாகவும், சிறுமைப் படுத்துவதாகவும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
காவல் துறையில் சேரும் பெண்கள் திருமணமாகாத கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை அங்கேயுள்ளது.
 
கன்னித் தன்மை சோதனைகள் வலியைத் தருவதாகவும் மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பதாகவும் இருந்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்சிடம் பேசிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.
 
காவல் துறையில் சேர்பவர்களிடம் நடத்தப்படும் மருத்துவ சோதனைகளின் ஒரு கட்டமாக கன்னித் தன்மையைப் பரிசோதிக்கும் சோதனைகள் அனைவரிடமும் நடத்தப்பட்டதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்