பிளேபாய் பத்திரிக்கையில் நிர்வாண பெண் படங்கள் நிறுத்தம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (18:18 IST)
நிர்வாண பெண்களின் படங்களை பதிப்பிப்பதை நிறுத்தப்போவதாக பிளேபாய் பத்திரிக்கை அறிவித்திருக்கிறது.


 

இணைய தொழில்நுட்பம் காரணமாக நிர்வாண புகைப்படங்கள் பதிப்பிப்பதற்கான காலமெல்லாம் முடிந்துவிட்டதாகவும் அதற்கு வரவேற்பில்லாமல் போய்விட்டதாகவும் பிளேபாய் பத்திரிக்கையின் அமெரிக்க முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
 

 

1970களில் 56 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுவந்த பிளேபாய் பத்திரிக்கை தற்போது வெறும் எட்டு லட்சம் பிரதிகளே விற்கப்படுகிறது. பிளேபாயின் இணையதள வடிவத்தில் ஏற்கனவே நிர்வாண புகைப்படங்கள் தடை செய்யப்பட்டு விட்டன. காரணம் அதற்கான முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளுக்கான தொடர்புகளை கொடுக்கவேண்டும் என்பதற்காக.

பிளேபாய் பத்திரிக்கையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படவிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு அந்த பத்திரிக்கையின் நிறுவனர் ஹக் ஹெப்னர் ஆதரவளித்திருக்கிறார் என்று The New York Times பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்