பார்த்தீனிய களைச் செடி ஒரு கிலோ 10 ரூபா

ஞாயிறு, 15 ஜூன் 2014 (07:29 IST)
இலங்கையின் வடக்கே பெருமளவில் பரவியுள்ள பார்த்தீனியம் என்ற களைச் செடிகளை அழித்தொழிப்பதற்காக வடமாகாண விவசாய அமைச்சு செயற்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பார்த்தீனியம் செடியைப் பிடுங்கி அழிப்பதில் பலரும் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
 
பிடுங்கப்படுகின்ற பார்த்தீனியம் செடி ஒரு கிலோ 10 ரூபாவுக்கு அதிகாரிகளினால் கொள்வனவு செய்யப்படுகின்றது.
 
ஊடுருவி பரவும் ஒரு தாவரமான பார்த்தீனியம் விவசாயப் பயிர்களையும், மருத்துவப் பயிர்களையும் வளரவிடாமல் பாதிக்கின்றது.
 
அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றது. எனவே பார்த்தீனியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
1980களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தபோது, அவர்களின் தளபாடங்களுடன் பார்த்தீனியச் செடிகளும் இலங்கையின் வடபகுதியில் பரவியிருந்ததாக அமைச்சர் கூறினார்.
 
அதேநேரம், அமெரிக்காவில் இருந்து கோதுமை பயிர் இறக்குமதி செய்யப்பட்டபோது, பார்த்தீனியம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
புதிதாகப் பதவியேற்றுள்ள வடமாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் பார்த்தீனியத்தை முழுமையாக ஒழிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
 
'இப்போது செடிகளைப் பிடுங்கி அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண்ணில் புதையுண்டு 20 வருட காலம் வரையில் உறங்கு நிலையில் இருக்கும் வல்லமை பெற்ற பார்த்தீனியம் புதிதாக முளைக்கும்போதும் தொடர்ந்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும் கூறினார் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்