நச்சு இருமல் மருந்து ஊழல், ஐந்து பேருக்கு சிறை

சனி, 30 ஜூலை 2016 (21:35 IST)
நூற்றுக்கணக்கானோரின் சாவுக்கு காணமாக இருந்த, பத்தாண்டு கால நச்சு இருமல் மருந்து ஊழலில் தொடர்புடைய ஐந்து பேருக்கு, பனாமா நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனைகளை வழங்கியிருக்கிறது.
 

 
உலகம் முழுவதும் நடத்தப்பட்டப் புலனாய்வில், இந்த மருந்து பொருட்களை கலந்து தயாரித்த மற்றும் வினியோகம் செய்த தேசிய சுகாதார நிறுவனமானது, அது கிளிசெரின் என்று எண்ணிய மூலப்பொருளை சோதித்து பார்க்கத் தவறிவிட்டது தெரியவந்தது.
 
உண்மையில் அந்த மூலப்பொருள் டைய்தேலின் கிளகோல் என்ற நச்சாக இருந்துள்ளது.
 
சீன நிறுவனத்திடம் இருந்து இந்த மூலப்பொருளை பெற்றிருந்த ஸ்பானிய நிறுவனத்திடமிருந்து, பனாமாவிலுள்ள மெடிகாம் மருந்து வினியோக நிறுவனம் அதனை வாங்கியுள்ளது.
 
மெடிகாம் அதிகாரிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்கு அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்