சவுதியில் எஜமானால் இம்சிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு 80,000 டாலர் நஷ்ட ஈடு

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (19:18 IST)
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தபோது எஜமானால் இம்சிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 80,000 டாலார்கள் என்ற பெருந்தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இந்தோனேஷியப் பணிப் பெண்கள் பெரிய எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகின்றனர்.
 
அவர் அங்கு பணியாற்றிய 7 வருட காலத்தில் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டதால், அவரது உடல் நிரந்தரமாக உருக்குலைந்து போயிருக்கிறது.
 
மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே அவர் அனாதையாக வீசப்பட்டுக் கிடந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
 
அதனையடுத்து ரியாத்தில் உள்ள இந்தோனேசிய தூதரகத்துக்கு அவரைப் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
 
அவரது முன்னாள் எஜமானருக்கு எதிராக வழக்கைத் தொடுப்பதற்கு இந்தோனேசிய தூதரகம் முயன்றது.
 
ஆனால், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்