காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு துவங்கியது

திங்கள், 30 நவம்பர் 2015 (18:00 IST)
புவி வெப்பமடைதலை குறைப்பதற்கானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக, பாரீஸில் உலக நாடுகளின் தலைவர்கள் கூடி, வரும் இரண்டு வாரங்களுக்கு நடத்தவுள்ள மாநாடு இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.


 
 
மனித சமுதாயத்தின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், தற்போதைய அரசாங்கங்களின் மீது வரலாறு மோசமானதொரு கரையை ஏற்படுத்திவிடும் எனவும் ஃப்ரென்ச்சு அதிபர் ஃப்ரான்சுவா ஒல்லாந்த் எச்சரித்தள்ளார்.
 
ஆனால் இந்தத் தலைவர்கள் சமர்ப்பித்துள்ள உறுதிமொழிகள் , புவிவெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கான இலக்கை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
 
முன்னதாக, ஏழை நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றத்தின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
இதனிடையே, இதுகுறித்த சட்டப்பூர்வமாக உலக நாடுகளை கட்டுப்படுத்தும் உடன்படிக்கைகளில் கையெழுத்திட, அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்