கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின.
இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய ஆரம்ப கட்டத்தில் மலேரியா எதிர்ப்பு சிகிச்சைக் காலத்தை இரட்டிப்பாக்குவது ஒரு வழியாக இருக்கலாம், ஆனால் இதற்கு உள்ள கால அவகாசம் மிகவும் குறுகியது என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை"யில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.