பெருநட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (20:07 IST)
இந்து சமுத்திரத்துக்கு மேலாகப் பறந்த வேளை, கடந்த மார்ச் மாதத்தில் விமானம் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பெரும் நிதி இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது.
 
ஜூலையில் இரண்டாவது விமானம் ஒன்று யுக்ரெய்னில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, பயணத்துக்கான பதிவுகள் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததால், இந்த வருடத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் மேலும் இழப்பு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.
 
முதலாவது விமானம் காணாமல் போனதை அடுத்து, விமானப் பயணத்துக்கான பதிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முதல் காலாண்டில் அந்த நிறுவனத்துக்கு 97 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்