கரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம் ?

வெள்ளி, 10 ஜூன் 2016 (18:53 IST)
கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.


 

 
கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து, அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள்.
 
அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது.


 

 
இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த உதவும் என்று இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
இத்திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளால் கவரப்பட்ட இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு ஐஸ்லாண்து மின் நிறுவனம் தான் சேகரித்து வைக்கும் கரியமில வாயுவின் அளவை அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்