' ஹாப்பி பர்த்டே' பாடலுக்கு காப்புரிமை இல்லை என்று வழக்கு

புதன், 29 ஜூலை 2015 (14:40 IST)
'ஹாப்பி பர்த்டே' எனும் வாழ்த்துப் பாடல் காப்புரிமையின் கீழ் வரவில்லை என்று தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழுவொன்று கூறுகிறது.
எனவே அந்தப் பாடலை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்க வேண்டும் எனவும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
பிறந்தாள் கொண்டாட்டங்களில் இந்தப் பாடல் உலகளவில் பரந்துபட்ட அளவில் பாடப்பட்டாலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இது அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பாடலை வெளியிட்ட வார்னர் சாப்பல் அதற்கு 1935ஆம் ஆண்டு தொடக்கம் காப்புரிமைத் தொகை கோரியதால் அது திரைகளில் அபூர்வமாகவே உபயோகப்படுத்தப்பட்டது.
 
அந்தப் பாடலுக்கு காப்புரிமை இல்லை என்று இப்போது தாங்கள் கண்டறிந்துள்ளதால், தமக்கு ஆதரவான தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
 
1927ஆம் ஆண்டு வெளியான சிறுவர்களுக்கான புத்தகம் ஒன்றில் இந்தப் பாடல் காணப்பட்டாலும், அதற்கு காப்புரிமை உள்ளது என்று அந்தப் புத்தகத்தில் ஏதும் கூறப்படவில்லையென இவர்கள் வாதிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்