ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு : 50 பேர் பலி

ஞாயிறு, 12 ஜூன் 2016 (20:10 IST)
அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.


 

 
துப்பாக்கியால் சுட்ட நபர், தன்னிடம் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.
 
இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்