ஜூலைக்கா ஹசன் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அவரது சக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதுடன், இவரது செயல் வெட்கக்கேடானது என்று விமர்சிக்க தொடங்கினர். அதையடுத்து பேசிய சபாநாயகர், ஹசன் தனது குழந்தையுடன் அவையை விட்டு வெளியேற உத்தரவிட்டார். எனினும், குழந்தையை விட்டுவிட்டு தனியே அவர் அவைக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.
"நாடாளுமன்ற வளாகத்தில் 'குழந்தை பராமரிப்பு மையம்' இருந்திருந்தால், எனது குழந்தையை அவைக்கு அழைத்து வந்திருக்க மாட்டேன். நாடாளுமன்றத்துக்கு அதிக பெண் உறுப்பினர்கள் வரவேண்டுமென்றால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்," என்று ஜூலைக்கா கூறினார்.