பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள்: தகவல்களை வெளியிட்ட விண்வெளி முகமை

வியாழன், 15 செப்டம்பர் 2016 (02:25 IST)
நமது அண்டமான பால்வெளி அண்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய அறிவு, பெருமளவு அதிகரித்துள்ளது.
 

 
ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும் இடம், அவைகளின் பிரகாசம் ஆகியவை பற்றிய தகவல்களை ஐரோப்பிய விண்வெளி முகமை தற்போது வெளியிட்டுள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில், கையா விண்வெளி தொலைநோக்கி மூலம் பெரும் அளவிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
 
இந்த தகவல்கள் மிகப்பெருமளவு குவிந்துவிட்டதால், அவற்றிலிருந்து சுவாரஸ்யமான ஏதாவது கண்டுபிடிக்க வேண்டி ஐரோப்பிய விண்வெளி முகமை,தொழில்சாரா விண்ணியல் ஆர்வலர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் உதவியை வரவேற்றுள்ளது.
 
பள்ளிக்கூட புத்தகங்களில் பால் வெளி அண்டம் சுருள் வடிவத்தில் இரண்டு கரங்கள் கொண்ட ஒரு தட்டு போன்ற படம் காணப்படுகிறது. ஆனால் இந்தப் புதிய தகவல்களின் அடிப்படையில், இந்த வடிவ படம் மாறக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்