வெள்ளத்தில் அடுத்த நாட்டுக்கு அடித்துச் செல்லப்பட்ட யானை

புதன், 3 ஆகஸ்ட் 2016 (19:36 IST)
அசாம் மாநிலத்திலிருந்து வங்கதேசத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானையை எவ்வாறு மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவருவது என்பது பற்றி ஆலோசிக்க இன்று இந்திய வனத்துறை அதிகாரிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.


 

 
கடந்த வாரம், பெண் யானை ஒன்று அசாம் காடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வங்கதேசத்தை அடைந்தது.
 
அந்த யானை தனது குழுவில் இருந்து பிரிந்து இருப்பதால் அது கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும் அங்குள்ள கிராம மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
 
மேலுல் யானையை எந்த வழியாக மீட்டு வருவது என்பது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்