பெருநெருக்கடியில் லைபீரியா

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2014 (21:03 IST)
இபோலா பரவல் காரணமாக லைபீரிய சுகாதார அமைச்சு முற்றாக நெருக்கடி நிலையை எதிர்கொள்வதாக மருத்துவ தொண்டு அமைப்பான எம் எஸ் எஃப் அமைப்பு கூறியுள்ளது.

அந்த நோயின் பரவல் தீவிரத்தை அந்த அமைச்சு குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று அந்த அமைப்பின் அவசரகால இணைப்பாளர் கூறியுள்ளார்.
 
இந்த நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தைக் கலைக்க சனிக்கிழமையன்று கலவரம் அடக்கும் போலிஸார் பயன்படுத்தப்பட்டனர்.
 
லைபீரியாவில் இந்த வைரஸால் பீடிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க மதகுருவுக்கு மட்ரிட்டில் உள்ள மருத்துவ மனையில் ''சோதனையில் உள்ள மருந்து'' மூலம் சிகிச்சை வழங்கப்படும் என்று ஸ்பானிஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
 
அமெரிக்காவில் இந்த மருந்து இரு அமெரிக்க தொண்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட போது அவர்களில் முன்னேற்றம் தென்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்