வரலாறு காணாத விலைக்கு ஏலம்போன நகைகள்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (18:55 IST)
காஷ்மீர் நீலக்கல் பதித்த மோதிரம் ஒன்றும் இயற்கை முத்துக்களால் ஆன சிறிய மாலை ஒன்றும் ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக ஏல நிறுவனமான சோத்பி தெரிவித்துள்ளது.


 

 
அரிதான பழுப்பு நிற முத்துக்களால் ஆன அந்த மாலை 3.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்த மாலை பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் முன்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
 
27.68 கேரட் எடையுள்ள காஷ்மீர் நிலக்கல்லும் வைரங்களும் பதிக்கப்பட்ட தி ஜுவல் ஆஃப் காஷ்மீர் என்ற மோதிரம் சுமார் 43,98,316 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.


 

 
இந்த இரண்டு நகைகளையுமே ஹாங்காங்கைச் சேர்ந்த சேகரிப்பாளர்கள் வாங்கியுள்ளனர்.

கலைப் பொருட்கள், நகைகள், ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் ஆர்வமுடைய விஸ்கவுண்டஸ் கௌட்ரேவின் சேகரிப்பில் அந்த முத்து மாலை இடம்பெற்றிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்