'மீண்டும் பனிப்போரை நோக்கிச் செல்லும் உலகம்' - கோர்பச்சேவ்

ஞாயிறு, 9 நவம்பர் 2014 (12:06 IST)
உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிப்பதாக சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரான மிக்கெய்ல் கோர்பச்சேவ் எச்சரித்துள்ளார்.


 
பெர்லின் சுவர்கள் வீழ்த்தப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பெர்லினில் உள்ள பிரண்டன்பேர் கேட்டுக்கு அருகே நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
 
சோவியத் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வெற்றி மமதையில் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
 
ரஷ்ய நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மனிதராக அதிபர் புட்டினுக்கு ஆதரவு தெரிவித்த அவர், ரஷ்யாவை பலிக்கடாவாக்குவதற்கு, உக்ரெய்னிய பிரச்சினையை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்