இனி தேர்வில் காப்பியடித்தால் 7 ஆண்டு சிறை - சீன அரசு அதிரடி

செவ்வாய், 7 ஜூன் 2016 (12:18 IST)
சீன அரசு, நாட்டின் கல்லூரி நுழைவுத்தேர்வில் காப்பியடிப்பவர்கள் ஏழு வருடம் வரை சிறைத்தண்டனை பெறக் கூடிய வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
 

 
இந்த வருடம் ஒன்பது மணி நேர தேர்வில் மோசடி நடப்பதை தடுப்பதற்காக ஒரு புதிய சட்டத்தையும் பல வழிமுறைகளையும் பயன்படுத்தப்படவுள்ளது.
 
சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுதுவதை தடுக்க சில பள்ளிகள் முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தையும், கைரேகை பதிவுகளையும் பயன்படுத்தி வருகின்றன.
 
மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களை தடுப்பதற்காக, ஆளில்லா கண்காணிப்பு விமானங்களையும், ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்