இறைச்சி உணவில் புற்றுநோய் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

திங்கள், 26 அக்டோபர் 2015 (18:54 IST)
சில வகை இறைச்சி உணவுகள் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி எச்சரிக்கும் அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிடுகிறது.


 

 
ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி தாம் நடத்தியிருந்த ஆய்வுகளின் முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் மீளாய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
 
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் புற்றுநோய் வரும் ஆபத்து மிக அதிகமாக முதலாவது இடத்தில் உள்ளது என்றும், சிவப்பு இறைச்சிகளில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றுமாக இந்த அறிக்கை முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று வெள்ளியன்று தகவல் வெளியிட்டிருந்தது.
 
இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்