சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பெலே

புதன், 10 டிசம்பர் 2014 (12:28 IST)
பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
 
சிறுநீரகப் பகுதியில் ஏற்பட்டிருந்த தொற்று காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவ்போலோ மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தீடீரென உண்மையான ஒரு பயத்தில் இருந்தார் என்றும், இப்போது குணமடைந்துள்ள 74 வயதாகும் அவர் வீட்டுக்கு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், பிரேசில் அணிக்காக விளையாடத் தான் தயாராக உள்ளதாக நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு கால்பந்து வீரரான பெலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தார்.
 
அதுமட்டுமன்றி அவரது கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் அவர் 1200 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்