துருக்கியின் தலைநகரில் இரண்டு பெரிய வெடிச் சம்பவங்கள்; 20 பேர் பலி

சனி, 10 அக்டோபர் 2015 (20:43 IST)
குர்து போராளிகள் மீதான துருக்கியின் தாக்குதல்களை நிறுத்தக் கோரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் இந்த 'தாக்குதல்' சம்பவங்கள் நடந்துள்ளன


 

 
துருக்கியின் தலைநகர் அன்காராவின் மத்திய பகுதியில் அமைதிப் பேரணி ஒன்றுக்காக மக்கள் கூடியிருந்த போது சக்திவாய்ந்த இரண்டு வெடிச் சம்பவங்கள் நடந்துள்ளன.
 
இந்த சம்பவங்களில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் ரத்த வெள்ளத்தில் பலர் வீழ்ந்துகிடப்பதையும் காட்டும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீள் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், குர்து ஆயுததாரிகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
 
இந்த சம்பவங்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று அரசாங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அரசு தான் இந்தத் 'தாக்குதல்களுக்குப்' பின்னால் இருப்பதாக குர்து-ஆதரவு எச்டிபி கட்சியின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்