உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சையால் நீரிழிவு நோய் வாய்ப்பு குறைகிறது

செவ்வாய், 4 நவம்பர் 2014 (08:31 IST)
உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் தங்களது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரும் ஆபத்தை சுமார் 80 சதவீதம் வரைக் குறைக்க முடியும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


 
வயிற்றின் அளவைக் குறைக்க கேஸ்ட்ரிக் பட்டைகளைக்கட்டுவது போன்ற அறுவை சிகிச்சை முறைகளை கையாண்ட 4,000க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு, இது போன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறைந்திருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது.
 
இந்த முடிவுகள் எல்லா வயதினரான, ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்துவதாக அந்த ஆய்வு கூறியது.
 
லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வாளர் ஒருவரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிவியல் சஞ்சிகையான லான்செட் டயபட்டீஸ் மற்றும் எண்டொக்ரினாலஜியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்