பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு

திங்கள், 10 நவம்பர் 2014 (12:33 IST)
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி ஜெர்மனியில் நினைவு நிகழ்வுகள் நடந்துவருகின்றன.
 
ஜெர்மனி ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல், மேற்கு ஜெர்மனிக்குள் தப்பிச்செல்ல முயன்று உயிர் நீத்தவர்களின் நினைவாக, பெர்லின் சுவரின் எஞ்சியுள்ள பாகத்தில் காணப்படும் வெடிப்புக்குள் ஒற்றை ரோசாப் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
பெர்லின் சுவர் இருந்த காலத்தில் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்தவர் அங்கேலா மேர்க்கல்.
 
இந்த சுவர் காரணமாக ஜெர்மனிக்குள் மட்டுமன்றி கிழக்கு ஐரோப்பா எங்கிலுமே துயரங்களை அனுபவித்தவர்களை நினைவுகூர்வது அவசியம் என்று அங்கேலா மேர்க்கல் கூறினார்.
 
ஜெர்மனியின் வீதிகளில் இசை நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
 
முன்னர் சுவர் இருந்த தடங்களில் பொருத்தி வைக்கப்பட்டுள்ள 8000 வெளிச்ச பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்