தூக்கிலிடப்பட்டார் இஸ்லாமிய கட்சித் தலைவர் மிர் காசிம் அலி

ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (13:19 IST)
பிரபல தொழிலதிபரும் வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவருமான மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.
 

 
சிறப்பு தீர்ப்பாயம் வழங்கிய போர் குற்றம் தொடர்பான தீர்ப்பை வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் 6-வது நபர் மிர் காசிம் அலி ஆவார்.
 
அவருடைய ஆணைக்கு இணங்க 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையின் ஆதரவாளர்கள் சிட்டகாங் நகரத்தில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்படுவதாக இந்த நீதிமன்றம் தெரிவித்தது.
 
அரசு எதிரிகளை ஒழித்துக்கட்ட இந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், கடந்தகால நிகழ்வுகளோடு வங்கதேசத்தை சரியாக உருவாக்கி கொண்டுவர இது உதவும் என்று அரசு கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்