வங்கதேசம்: நெடுஞ்சாலைகளில் ஆட்டோக்களுக்குத் தடை

வியாழன், 23 ஜூலை 2015 (14:41 IST)
வங்கதேசத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆட்டோக்கள் உள்ளிட்ட முச்சகர வாகனங்கள் ஓட்டப்படுவதை உடனடியாக தடைசெய்வதாக வங்கதேச அரசாங்கம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இந்த முச்சக்கர வாகனங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியின் வங்கமொழி சேவையிடம் தெரிவித்தார். எனினும் இந்தத் தடையை ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் எதிர்த்துள்ளனர்.
 
அரசு விதித்துள்ள இந்தத் தடை பல்லாயிரக்கணக்கானவர்களை வேலை இழக்கச் செய்துவிடும் என்றும் பொதுமக்களுக்கு இதனால் பெரும் தொல்லைகள் ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். குறிப்பாக தமது அன்றாட பயணத்தேவைகளுக்கு ஆட்டோக்களை சார்ந்திருக்கும் நடுத்தரவர்க்கத்தினரும், ஏழைகளும் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்