கொரோனாவுக்கு நடுவே மற்றொரு பிரச்சனை: பரிதவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:51 IST)
கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்கா ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் காட்டுத்தீ மற்றும் சூறாவளியை எதிர்கொள்ளப் போராடி வருகின்றன.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள சூறாவளி 'ஹாஷென்' காரணமாக நூற்றுக்கணக்கான ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
சூறாவளியின் பாதையில் உள்ள 8 லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜப்பான் பிரதமர் அபே மக்கள் அனைவரையும் கவனமுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
சமீபத்தில் அங்கு 'மாய்சக்' புயல் ஏற்பட்டது. அது இந்தாண்டின் கடுமையான புயலாக கருதப்படுகிறது.
 
குயிஷு பகுதியில் உள்ள 430,000 வீடுகளுக்கு, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை மூன்று மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு ஊடகம்  கூறுகிறது.
 
ஜப்பான் கடந்து திங்கட்கிழமை தென் கொரியா நோக்கிச் செல்கிறது இந்த சூறாவளி. அந்நாடு இதற்கான முன்னேற்பாடுகளுடன் உள்ளது.
 
ஜப்பானின் நிலை இதுவென்றால் அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

கலிஃபோர்னியாவின் பிரபலமான நீர்த்தேக்கம் அருகே உள்ள கழிமுக பகுதியில் வெள்ளிக்கிழமை தீ பரவ தொடங்கியது. ஏறத்தாழ 200 பேர் அந்த சுற்றுலா பகுதியில் சிக்கி உள்ளனர். இதுவரை 20 பேர் காயமடைந்துள்ளனர்.
 
0% தீயே அணைக்கப்பட்டுள்ளது என கலிஃபோர்னியா வன மற்றும் தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது.
 
ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து கலிஃபோர்னியாவில் குறைந்து 1000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்